News May 24, 2024
பிரஜ்வால் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்

பிரஜ்வால் விவகாரத்தில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மத சார்பற்ற ஜனதா தளம் எம்பி பிரஜ்வாலின் பாஸ்போர்ட்டை முடக்கி, அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், இதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக
கர்நாடக அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
Similar News
News March 11, 2026
மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் /பகிர்மானம் / மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News March 11, 2026
PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <


