News May 24, 2024
ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு

காவி உடை திருவள்ளுவர் சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் என்ற பெயரில் காவி வண்ணத்தில் திருவள்ளுவர் படத்துடன் கூடிய அழைப்பிதழை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிக எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 19, 2025
நாளை மதியம் 1:30-க்கு இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை நாளை BCCI அறிவிக்கவுள்ளது. 12:00 pm-க்கு மும்பையில் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கும் நிலையில், 1:30 pm-க்கு அணி விவரம் அறிவிக்கப்படும். பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் நாளையே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆசியக் கோப்பை போட்டி செப்., 9-ம் தேதி துபாயில் தொடங்கவுள்ளது. அணியில் யாருக்கு இடமிருக்கும், யார் நீக்கப்படுவார்? கமெண்ட் பண்ணுங்கள்.
News August 19, 2025
ராசி பலன்கள் (19.08.2025)

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பக்தி ➤ சிம்மம் – சோதனை ➤ கன்னி – அன்பு ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – ஆக்கம் ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – தடங்கல் ➤ மீனம் – சாந்தம்.
News August 19, 2025
அனைத்து ‘திருட்டு’களையும் கண்டறிவோம்: ராகுல் வார்னிங்

<<17339036>>வாக்காளர் திருட்டுக்கு<<>> பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ECI-யுடையது என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் திருட்டுக்கு நாங்கள் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒட்டுமொத்த நாடும் உங்களை பிரமாண பத்திரம் கேட்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், MP தொகுதியிலும், MLA தொகுதியிலும் உங்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று ECI-யை எச்சரித்துள்ளார்.