News May 24, 2024
இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்

முகூர்த்தம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று 535, நாளை 592 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் விரைவாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
கேஸ் சிலிண்டர் இல்லையா.. தப்பிக்க இதுதான் வழி (PHOTOS)

மேற்கு ஆசிய நாடுகளின் போர் தாக்கம் இந்தியாவில் நேரடியாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல <<19341813>>ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன<<>>. LPG-ஐ யூஸ் செய்து பழகிவிட்ட நிலையில், அது இல்லாமல் எப்படி சமைப்பது என பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். அப்படி, வீட்டில் GAS-க்கு மாற்றாக என்ன உள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News March 10, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் ➤இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் ➤அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக PAN Card, RC Book, License என டிஜிலாக்கரில் பதிவு செய்த எல்லாவற்றையும் இதன் மூலம் டவுன்லோடு செய்யமுடியும். இந்த முறையில் ஆவணங்களை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். SHARE.
News March 10, 2026
உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: FAI

வரவிருக்கும் காரீஃப்(june-nov) சாகுபடி பருவத்திற்கு போதுமான உரம் இருப்பு உள்ளதாக இந்திய உர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 6 நிலவரப்படி 177.31 லட்சம் டன்கள் கையிருப்பு இருப்பதாகவும், இதில் 59.30 லட்சம் டன் யூரியா, 25.13 லட்சம் டன் DAP & 55.87 NPKS லட்சம் டன் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், எரிவாயு விநியோகம் குறைவது உள்நாட்டு யூரியா உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.


