News May 24, 2024
பதிப்பகங்களுக்கு 4 ஆண்டாக ஆர்டர் தராத அரசு நூலகத்துறை

ஆண்டுதோறும் பதிப்பகங்களிடம் ஜுலை மாதத்துக்குள் புதிய புத்தகங்களை ஆர்டர் செய்து, நூலகங்களுக்கு பொது நூலகத்துறை வழங்குவது வழக்கம். 16 பக்கத்துக்கு ரூ.3.75-ரூ.7 வரை கணக்கிட்டு புத்தகத்துக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனால் பதிப்பகங்களுக்கு நிலையான வருவாய் கிடைத்த நிலையில், 2020 முதல் ஆர்டர் அளிக்கப்படவில்லை என்றும், இதனால் பதிப்பகங்களின் வருவாய் பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 22, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
அதிமுக ஒருங்கிணைப்பு; பாஜகவின் புதிய ஸ்கெட்ச்!

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதற்கு, EPS ஒத்துவராததால் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பழைய பிளானுக்கு பதிலாக, தற்போது பாஜக புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் சிலவற்றை பிரிந்திருப்பவர்களுக்கு வழங்கலாம் என திட்டம் இருக்கிறதாம். இதனாலேயே அதிமுகவிடம் பாஜக 50 சீட்களை கேட்கிறது எனவும் கூறுகின்றனர்.
News November 22, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.


