News May 24, 2024
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகம் வழங்க ஏற்பாடு

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்குத் தேவையான பாட புத்தகங்களை சரியாக பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News September 16, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 15, 2025
நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News September 15, 2025
நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன இதன்படி வருகிற 20, 27 அக்.4, 11 ஆகிய நாட்களில் காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும். சென்று திரும்பி வருவதற்கு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.500 புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.