News May 24, 2024
கரூர்: மக்களை தேடி மருத்துவத்தில் 3-¾ லட்சம் பேர் பயன்

தமிழகத்தில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச்சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் ஆகியோர் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவம் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 587 பேர் பயன் பெற்றுள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
வாலிபரிடம் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறி!

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சத்தியபாலா மகன் ஹரிஷ் (19). இவர் நேற்று லாலாபேட்டை மேம்பாலம் அருகே தனது பைக்குடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சசிகுமார் (23) என்பவர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4000 பறித்து கொண்டு சென்றுவிட்டார். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்தனர்.
News November 7, 2025
கரூரில் திணறும் வியாபாரிகள்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய ஜவுளி பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக காரணமாக தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் என்று அழைக்கப்படும் கரூரில் 150க்கு மேற்பட்ட பிரிண்டிங் நிறுவனங்கள் ஆர்டர் இல்லாமல் திணறி வருகின்றனர்.தமிழக அரசு இவ்வாறு வேலை இல்லாமல் தவிக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் பிரிண்டிங் பிரஸ் உரிமை யாளர்களுக்கும் மானிய விலையில் கடன் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 7, 2025
கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)


