News May 24, 2024

கள்ளக்குறிச்சி: 4 ஆண்டுகள் ஆகியும் அலட்சியம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தனை அரசு அலுவலக பெயர் பலகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சார்நிலை கருவூலத்தில் விழுப்புரம் மாவட்டம் என பெயர் உள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Similar News

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: பாராட்டுக் கடிதங்களை வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நிர்ணயம் செய்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (25.11.2025) பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

image

கள்ளக்குறிச்சி: காரனூரை சேர்ந்த ராஜனின் அக்கா மகன் பழனிவேல் தனியார் உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜன் நேற்று (நவ.24) தனியார் உணவகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக ராஜன் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!