News May 24, 2024
கடலூர்: நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி சோதனை

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணி அளவில் எஸ்.பி. ராஜாராம் திடீரென வந்து பேருந்து நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டார்.அப்போது பேருந்து நிலையத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.எஸ்.பி.யுடன் வந்திருந்த அதிரடிப்படை போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
Similar News
News March 14, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
‘அடிமை கூட்டணி’: கடலூர் அமைச்சர் அறிக்கை

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
குடிமைப் பணிகள் தேர்வு -2 ,ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 15.03.2026 அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார். தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 315 பேரும், மாலையில் 322 பேரும் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


