News May 24, 2024
நொய்யலில் தூர்வாரும் பணி: ஆணையாளர் ஆய்வு

கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் வழக்கமாகச் செல்லும் தண்ணீரைவிட அதிக அளவு செல்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 5, 2025
திருப்பூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருப்பூர் அரிசி கடைவீதியைச் சேர்ந்த நந்தினி. கடந்த 4 மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ராமமூர்த்தியின் செயல்பாடு பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி பேச மறுத்த நந்தினியை பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
News November 5, 2025
திருப்பூர்: ரயில்வே வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 5, 2025
திருப்பூர்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


