News May 24, 2024

கிருஷ்ணகிரி கலெக்டர் நேரில் ஆய்வு

image

ஊத்தங்கரை விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இறகு பந்து உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News April 20, 2025

கிருஷ்ணகிரி: கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

கிருஷ்ணகிரி, ஒசூரில் அருள்மிகு சந்திர சூடேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் வேலைவாய்ப்பு மற்றும் கடன் தொல்லை நீங்கும் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெறவும் இக்கோவிலுக்கு வரலாம். *கடனற்று வாழ இங்கு செல்லவும். நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 20, 2025

கிருஷ்ணகிரி நண்பனை அடித்து நகையை பறித்த நண்பர்கள்

image

கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்தவர் சின்னப்பையன்(32). கடந்த மார்ச் மாதம் இவருடைய நண்பர்களான மாரியப்பன், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்த மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்த சின்னப்பையனை தாக்கி 2 1/2 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி போலீசாரி இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். *நண்பர்களே ஆனாலும் கவனமாக இருங்கள்*

News April 19, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை  இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!