News May 24, 2024
திமுக கட்டியதை அணை என சொல்ல முடியாது: ராமதாஸ்

தேர்தல் முடிவுக்கு பின் முல்லைப் பெரியாறு அணை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “காமராஜர் காலத்தில் தான் அணைகள் கட்டப்பட்டன. 57 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை அணைகள் என சொல்ல முடியாது. அதில், ஒரு டி.எம்.சி கொள்ளளவுகூட இல்லை” என்றார்.
Similar News
News March 24, 2026
BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.
News March 24, 2026
பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிறப்பிப்பு

மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நாட்டில் எரிபொருள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவே உலகின் முதல் எரிபொருள் அவசர நிலையாகும். பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இருந்தே 98% கச்சா எண்ணெய்யை பிலிப்பைன்ஸ் பெறுகிறது.
News March 24, 2026
தாமரை சின்னத்துடன் சீட்டை உறுதி செய்தார் திருமாறன்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாறன் இதை உறுதி செய்தார். 2 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில், ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


