News May 23, 2024
நல்ல பின்னணி கொண்ட குற்றவாளிக்கு ஜாமின்

மத்திய பிரதேசத்தில் சிறுமியை வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாக பேசி துன்புறுத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைதானார். இந்நிலையில், இளைஞரின் குடும்பம் நல்ல பின்னணியில் இருப்பதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞருக்கு ம.பி. உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான மாணவரின் தந்தை, தங்கள் மகன் செய்ததை நினைத்து வெட்கப்படுவதாக கூறி மன்னிப்பு கேட்டார்.
Similar News
News March 10, 2026
நண்பன் ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு: ரஷ்யா

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உயர் தலைவர் <<19341792>>மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு டிரம்ப் எதிர்ப்பு<<>> தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்பு நாடான ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும், என்ன ஆனாலும் தங்களது ஆதரவு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
News March 10, 2026
இந்த கணக்குகளில் 0 பேலன்ஸ் இருந்தாலும் அபராதம் இல்லை!

PMJDY உள்பட 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கணக்குகளைப் பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது, மேலும் வைப்புத்தொகை, பணம் எடுப்பது மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது; வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 10, மாசி 26 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


