News May 23, 2024
ஹரியானாவில் மீண்டும் பாஜக கொடி பறக்குமா?

ஹரியானாவில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2009இல் காங்கிரஸ்10 தொகுதிகளில் 9இல் வென்றது. ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தலில் 7 இடங்களில் பாஜக வென்றது. குறிப்பாக, பாஜக 58% வாக்குகளை பெற்றது. அம்மாநில அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் பெறாத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை மறுநாள் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
Similar News
News September 15, 2025
பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
News September 15, 2025
BREAKING: 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம்

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு CBSE பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும். மாதாந்திர தேர்வு, செயல்முறை தேர்வு, வருகைப் பதிவு ஆகியவை உள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 15, 2025
Beauty Tips: முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் நல்லதா?

ஐஸ் க்யூப்களை முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துப்போகாது, டாக்டரின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.