News May 23, 2024
மாநில அளவிலான கைப்பந்து செலக்சன்

திருவண்ணாமலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாணவிகளுக்கான 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாநில அளவிலான கைப்பந்து செலக்சன் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 12 ஆம் வகுப்புவரை விடுதி உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
தி.மலை BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: ஆரணி-04173-226353, பெரணமல்லூர்-04183-245204, தெள்ளார்-04183-244024, வந்தவாசி-04183-225064, வெம்பாக்கம்-04182-247221, செய்யாறு-04182-222258, ஜவ்வாதுமலை-04181-245245, தண்டராம்பட்டு-04188-246899
News March 5, 2026
புது பொலிவுடன் தி.மலை வி.சி.க

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட மறுசீரமைப்பு நிர்வாக பட்டியல் மார்ச்.4 இன்று வெளியிடப்பட்டது. வி.சி.க மாவட்ட செயலாளராக ச.நியூட்டன், பொருளாளராக எழிலன், செய்தி தொடர்பாளராக சுரேஷ் திவான் நியமிக்கப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
News March 5, 2026
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


