News May 23, 2024
டெல்லியில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா பாஜக?

டெல்லியில், 7 தொகுதிகளையும் பாஜக வெல்லும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக கூறிய அவர், சிறையில் இருந்த கெஜ்ரிவால் பரப்புரை செய்வது பாஜகவுக்கு சாதகமாக மாறும் என்றார். டெல்லியில் கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களிலுமே பாஜக வென்றது. இந்த முறை பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 20, 2026
ரம்ஜான் விடுமுறை.. 3 நாள்கள் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

நாளை ரம்ஜான் விடுமுறையையொட்டி, மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT
News March 20, 2026
நீர்யானை தாக்கியதால் பெண் கால்நடை டாக்டர் பலி!

கர்நாடகாவில் நீர்யானை தாக்கி பெண் கால்நடை டாக்டர் சமீக்ஷா ரெட்டி (27) பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிமோகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் கர்ப்பமாக இருந்த நீர்யானையின் உடல் வெப்பநிலையை அவர் பரிசோதிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நீர்யானை தாக்கியதில் சமீக்ஷா படுகாயமடைந்தார். அருகிலுள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். RIP
News March 20, 2026
CINEMA 360: முதல் நாளில் ₹241 கோடி அள்ளிய ‘துரந்தர் 2’

*நிவின்பாலி நடித்துள்ள அரசியல் திரைப்படம் ‘பிரதிச்சயா’ வரும் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. *’துரந்தர் 2′ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ₹241 கோடி வசூலித்துள்ளது. *’நீளிரா’ படத்திற்கு வாஹீசன் ராசையா பாடியுள்ள கலியாண பைலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. *தாய் கிழவி திரைப்படம் மார்ச் 26-ம் தேதி ஓடிடியில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


