News May 23, 2024

வேலுமணி பேட்டியால் அதிமுகவில் புது சர்ச்சை

image

எந்த முடிவையும் இபிஎஸ் துணிந்து எடுக்கத் தயங்குவதாகவும், அவர் மீது வேலுமணி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வேலுமணி அண்மையில் அளித்த பேட்டியில், எந்த முடிவை எடுத்தாலும், இபிஎஸ் தங்களுடன் கலந்தாலோசித்தே எடுக்கிறார் என்றார். வேலுமணியின் பேட்டியை இபிஎஸ் ஏற்கவில்லை, இது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News September 4, 2025

கூல்டிரிங்ஸ், புகையிலை பொருள்களுக்கு 40% வரி

image

சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 0% வரி: FM

image

பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக FM நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News September 3, 2025

BREAKING: ஜிஎஸ்டி வரம்பில் 12%, 28% நீக்கம்

image

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த மாற்றம் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!