News May 23, 2024
அடிப்படை உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது

அக்னிபத் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்து தவறானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிப்பதும், ஆட்சிக்கு வந்தால் ஒரு திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பதும் எதிர்க்கட்சி அரசியலின் அடிப்படை உரிமை என அவர் தெரிவித்தார். முன்னதாக, அக்னிபத் திட்டத்தை விமர்சித்து கருத்து கூற வேண்டாம் என காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
Similar News
News March 11, 2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS
News March 11, 2026
TN-ல் பணியாற்றிய காலம் பொற்காலம்: RN ரவி

மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்ட ரவி TN மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 54 மாதங்கள், TN மக்களோடு கலந்து பழகி, அவர்களின் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்ததாக கூறிய அவர், இப்போது TN மக்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், TN-ல் செலவிட்ட இந்த நாள்கள், தன் வாழ்வின் பொற்கால நாள்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. அரசியலில் பரபரப்பு மாற்றம்!

தமிழக தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி அமைக்காத ராமதாஸ், சசிகலா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், திமுக, அதிமுக இல்லாத விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு, வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு களமிறங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.


