News May 23, 2024
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

முகூர்த்தம், வார இறுதி நாள்களையொட்டி, அடுத்த 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மே 24, 25இல் 535 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 26 அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் வகையிலும் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
கூல்டிரிங்ஸ், புகையிலை பொருள்களுக்கு 40% வரி

சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 0% வரி: FM

பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக FM நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
News September 3, 2025
BREAKING: ஜிஎஸ்டி வரம்பில் 12%, 28% நீக்கம்

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த மாற்றம் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.