News May 23, 2024

வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு?

image

உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், வெங்காய விளைச்சல் நடப்பு ஆண்டில் 16% சரிந்து 25.47 மில்லியன் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டில் வெங்காய விலை உயர வாய்ப்புள்ளதால், ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கையிருப்பு வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, பின்னர் விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 5, 2026

மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News March 5, 2026

CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

image

505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது வெறும் 13% தான்; ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

News March 5, 2026

Swiggy, Zomato-வுக்கு போட்டியாக வந்தாச்சு Rapido-வின் Ownly!

image

பெங்களூருவில் Ownly செயலியின் மூலம் உணவு டெலிவரி மார்க்கெட்டில் Rapido கால்பதித்துள்ளது. ஹோட்டல் பில்லுடன் சேவை கட்டணமும் அதிகமாக இருப்பதால், மொத்த பில் அதிகமாக இருப்பதாக Zomato, Swiggy மீது தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான், Ownly ஆப் சேவை கட்டணமே இல்லாமல் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவில் தங்களது மாடல் ஹிட்டானால், பிற நகரங்களுக்கும் சேவையை விரிவுப்படுத்தவும் Rapido திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!