News May 23, 2024
பெரம்பலூர் பகுதிகளில் நெற்பயிர்கள் சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காற்றுடன் பெய்த கன மழையினால் நொச்சியம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் அளவிலான நெற்கதிர்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
பெரம்பலூர்: SIR பணி குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பணி சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பெரம்பலூரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் வண்ணக் கோலங்களிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த பட்டுள்ளது.
News November 9, 2025
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
பெரம்பலூர்: காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை காரை பிரிவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 15 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயல்களை விற்றது தெரியவந்துள்ளது.


