News May 23, 2024
முதல்வரை ஒருமையில் அழைப்பதை ஏற்க முடியாது

சவுக்கு சங்கர் முதல்வரை ஒருமையில் அழைத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் முதல்வரை எவ்வித வரையறை இன்றி ஒருவர் பேசுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். கருத்துரிமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக நீதிபதிகள் கூறினர்.
Similar News
News March 24, 2026
10 நாள்களில் ₹14,000 குறைந்த தங்கம்!

தங்கம் விலை 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹14,000 குறைந்துள்ளது. தற்போது சென்னையில் 1 சவரன் <<19461962>>₹1,04,000-க்கு<<>> விற்பனையாகிறது. விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் மக்கள் தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக பேசிய நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, தங்கம் வாங்க இது சரியான நேரம் எனவும், வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மதம் மாறினால் SC சான்றிதழ் ரத்தாகும்: சுப்ரீம் கோர்ட்

இந்து, பௌத்த, சீக்கிய மதத்தவர்களை தவிர வேறு எவரும் SC என கருதப்பட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து தற்போது பாஸ்டராக உள்ளார். இந்நிலையில், தன்னை தாக்கியவர்களை எதிர்த்து SC/ST பிரிவில் அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதை விசாரித்த கோர்ட், அவர் SC-ஐ சேர்ந்தவர் என்று உரிமை கோர முடியாது என தெளிவுப்படுத்தியுள்ளது.