News May 23, 2024

சிவகங்கையில் 7 மணிவரை மிதமான மழை

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

சிவகங்கை: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

image

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

சிவகங்கை: ஆசிரியர்கள் கடத்தல்; 2 பேர் கைது

image

தேவகோட்டை ராம்நகரை சேர்ந்தவர் அருள்செழியன். இவரது மனைவி சாந்தி மெர்சி கிரேஸ். இருவரும் ஆண்டாவூரணி தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். இருவரும் பள்ளிக்கு காரில் சென்றபோது நான்கு பேர் காரை மறித்து அருள் செழியனை மிரட்டி மற்றொரு காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதோடு மதுரையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் ராம்நகரை சேர்ந்த பாரதிராஜா, கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர்

News March 10, 2026

சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!