News May 23, 2024

ஜூன் 1இல் விண்ணில் பறக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

image

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம், வரும் ஜூன் 1ஆம் தேதி பகல் 12.25 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்ணில் பறக்க உள்ளார். ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதாவின் விண்வெளி பயணம் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்டு, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Similar News

News March 10, 2026

உங்களுக்கு Overthinking பிரச்னை இருக்கா?

image

Overthink செய்வதால், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனரீதியிலான பிரச்னைகள் மட்டுமின்றி உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னை போன்றவை உண்டாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையிலிருந்து விடுபட தியானம் செய்யவும், மனதில் எதையும் அழுத்தி கொள்ளாமல் வெளிப்படையாக பேசவும் மனநல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், Overthink பிரச்னை இருப்பவர்களுக்கு பாடல்கள் கேட்பதும் ஹெல்ப் பண்ணுமாம்.

News March 10, 2026

மது அருந்துவதில் எந்த மாநிலம் டாப் தெரியுமா?

image

பரவலாக மக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், மது விற்பனை என்னவோ குறையவே இல்லை. கடந்த நிதியாண்டில் அதிகமாக மது விற்பனையான டாப் 10 மாநிலங்களின் பட்டியலை IMFL(Indian Made Foreign Liquor) வெளியிட்டுள்ளது. போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும். விற்கப்பட்ட மதுபான பெட்டிகளின் (1 பெட்டி = 12 பாட்டில்கள்) அடிப்படையில் இப்பட்டியல் வரையறை செய்யப்பட்டுள்ளது.

News March 10, 2026

விஜய் – த்ரிஷா காதலை பாராட்டிய பிரபல இயக்குநர்

image

விஜய், த்ரிஷாவிடம் பாராட்டத்தக்க விஷயம் ஒன்றை கண்டதாக பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் பதிவிட்டுள்ளார். தங்களுக்கு இடையே எதுவும் இல்லை என பாசாங்கு செய்யாததில் ஒரு கண்ணியம் இருக்கிறது; காதலை பாவம் போல கருதி அதை மறைக்காததில் ஒரு கண்ணியம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு சொந்தமில்லை எனவும், அவர்களுக்கு வாழவும் காதலிக்கவும் உரிமையுண்டு என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!