News May 23, 2024
புதிய உச்சத்தில் பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத வகையில் 75,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,227 புள்ளிகள் உயர்ந்து 75,448ஆகவும், நிஃப்டி 349 புள்ளிகள் உயர்ந்து 22,947ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச அளவில் சாதகமான சூழல் நிலவியது பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், ஐ.டி., வங்கித்துறை பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
Similar News
News March 11, 2026
6 வருடங்களுக்கு முன்.. இன்று என்ன நாள் தெரியுமா?

2020-ல் இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.
News March 11, 2026
கேஸ் இல்லாமல் இந்த காலை உணவை செய்யலாம்!

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இச்சூழ்நிலையில் எரிவாயுவை சேமிப்பது நல்லது. அடுப்பை பற்றவைக்காமலேயே நீங்கள் உணவை தயாரிக்க முடியும். அதன்படி தோசை, பூரி, வடைக்கு பதிலாக, சாலட்டுகள், சாண்ட்விச்கள், முளைகட்டிய உணவுகள், பழங்கள், ரொட்டி-ஜாம் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடலாம். இவை உங்கள் சிலிண்டரை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் காப்பாற்றக்கூடிய உணவுகளே. SHARE IT.
News March 11, 2026
வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <


