News May 23, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டுகள் சிறை

பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 13-வயது சிறுமிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் செங்கல் சூளை அதிபர் ஜெயக்குமார்(32) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயக்குமார் குற்றம் செய்தது உறுதியானதை அடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, ஜெயக்குமாருக்கு 20 ஆண்டு சிறை & 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News March 15, 2026
‘சிலிண்டருக்கு’ மாலை போட்டு CPI கட்சியினர் போராட்டம்!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் தலைமையில் நடந்த இதில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

தருமபுரி: காட்டுப்பன்றி மோதி விவசாயி கொடூர பலி

தருமபுரி மாவட்டம், திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் (64) என்ற விவசாயி, நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்குச் சென்றபோது, குறுக்கே வந்த காட்டுப்பன்றிகள் மோதி நிலைதடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.