News May 23, 2024
திருநெல்வேலியில் முச்சதத்தை தாண்டிய மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (மே 23) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
நெல்லை: மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் தேர்வு திட்டம்

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய பண்ணை சாரா, வேளாண் கடன்களில் 31.12.2022 வரை தவணை தவறியவற்றுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் – 2023 செயல்படுகிறது. 12.09.2024க்கு முன் 25% செலுத்தி, மீதி 75% ஒரே தவணையில் 9% வட்டியுடன் செலுத்தி கடனை தீர்க்கலாம். கூடுதல் வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க
News September 9, 2025
கருப்பந்துறையில் மின்னல் தாக்கி நடந்த விபரீதம்!

கருப்பந்துறையைச் சேர்ந்த பாலம்மாள்(60) மற்றும் உய்க்காட்டான்(14) நேற்று மாலை கருப்பந்துறை இந்திரா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தை மின்னல் தாக்கியதில் மரக்கிளைகள் முறிந்து பாலம்மாள் மற்றும் உய்க்காட்டான் மீது விழுந்ததில் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 ஆடுகள் இறந்தன.
News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் மேலும் 180 பயணிகள் பயணிக்கலாம்

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 8 பெட்டியில் இருந்து கடந்த ஜனவரி 15 முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டியுடன் இயங்கி வருகிறது. தற்போதும் காத்திருப்போர் பட்டியல் உள்ளதால் 20 பெட்டிகளுடன் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதனால் இந்த ரயிலில் 180 பேர் கூடுதலாக பயணிக்கலாம்.