News May 23, 2024
“REMAL” புயல் உருவாகிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிரப் புயலாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு “REMAL” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
ஒரே இடத்தில் ஸ்டாலின், விஜய்.. அரசியலில் பரபரப்பு

திருச்சியில் இம்மாத இறுதியில் தவெகவின் 3-வது மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் 12-வது மாநில மாநாடும் வருகிற 9-ம் தேதி திருச்சியில்தான் நடைபெறவுள்ளது. திருச்சி எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு திருப்பம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி இருக்கையில், தேர்தல் நெருங்கும் நிலையில் அங்கு ஸ்டாலின், விஜய் அடுத்தடுத்து மாநாடு நடத்தவிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News March 6, 2026
கடிகார முள் ஏன் வலது பக்கமாக சுற்றுகிறது தெரியுமா?

கடிகார முள்களின் திசையை பற்றி புரிந்துகொள்ள நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இயந்திர கடிகாரங்களுக்கு முன்பு மக்கள் நேரத்தை அறிய சூரியக் கடிகாரத்தை பயன்படுத்தினர். தரையில் நிறுத்திய குச்சியின் நிழல் சூரியன் நகர்வுக்கு ஏற்ப இடமிருந்து வலமாக நகரும். அதை வைத்தே மக்கள் நேரத்தை கணித்து வந்தனர். அந்த நிழலே நவீன கடிகாரத்தின் கடிகார முள்களாக மாறியுள்ளது. SHARE IT.
News March 6, 2026
இனி 6 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் <<19201855>>மகப்பேறு விடுப்பு<<>> வழங்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பிறகு அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


