News May 23, 2024
கொல்கத்தா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மம்தா எதிர்ப்பு

ஓபிசி சான்றிதழ் தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த மம்தா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதேநேரத்தில் ஓபிசி இடஒதுக்கீடு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 3, 2026
பூத் ஏஜெண்ட் ஆக இருப்பேன்: அண்ணாமலை

சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஓட்டுப்பதிவு(ஏப்.23 ) நாளன்று முதல் ஆளாக வாக்கு செலுத்திவிட்டு, அதன்பிறகு ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜெண்ட் ஆக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: வினைத்தூய்மை
▶குறள் எண்: 652
▶குறள்: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
▶பொருள்: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
News April 3, 2026
ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதில் மாற்றலாம்

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதாக மாற்றிக்கொள்ளும் வகையில் விதிகளை திருத்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அந்நிய செலாவணி கவுன்ட்டர்களில் இனி வெளிநாடு செல்லும் இந்தியர்களும் இந்திய ரூபாயை மாற்றி வெளிநாட்டு நாணயமாக மாற்றலாம். முன்னதாக, இந்தியாவில் வெளிநாட்டினருக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டு வந்தது.


