News May 23, 2024
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மோடிக்கு இந்தியில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். அந்த அழைப்பு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேசத்துக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News March 19, 2026
தி.மலை: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

தி.மலை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News March 19, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.
News March 19, 2026
தவெகவா? தனிக் கட்சியா? குழப்பத்தில் ராமதாஸ்!

பாமக சின்னம் குறித்த வழக்கு மே 10-ம் தேதிக்கு பிறகே விசாரணை என்ற கோர்ட் உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த வாரமே கூட்டணிக்கான வாகனம் அருகே வந்துவிட்டதாக ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால், தற்போது வரை முடிவை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளார். தைலாபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெகவுடன் செல்லலாம் என சிலரும், தனியாக போட்டியிடலாம் என சிலரும் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.


