News May 23, 2024
IAS, IPS அதிகாரிகளில் யாருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது?(1/2)

IAS, IPS ஆகிய 2 பதவிகளுமே இந்திய ஆட்சித்துறை பணிகள் ஆகும். இதில் IAS அதிகாரிகள் ஆட்சி நிர்வாகம், கொள்கை வகுத்தல், அதை அமல்படுத்துதல் பணிகளில் ஈடுபடுவர். IPS அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு அமல், குற்ற வழக்கு விசாரணை, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவர். அதிகாரத்தை பொறுத்தவரை 2 பதவிகளையும் ஒப்பிட்டால், IAS அதிகாரிகளுக்கே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.


