News May 23, 2024

தேனியில் பிளம்ஸ் பழங்கள் விற்பனை

image

கொடைக்கானலில் உற்பத்தி செய்யப்பட்ட பிளம்ஸ் பழங்கள் தற்போது தேனி நகர்பகுதியில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. பிளம்ஸ் பழங்கள் கோடை காலமான மே-யில் துவக்கி ஒரு மாதம் விற்பனை செய்யபட்டு வரும். இந்தாண்டு வரத்து தாமதமாக துவங்கி உள்ளது. தற்போது கிலோ ரூ.280 முதல் ரூ.320 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் பலரும் பிளம்ஸ் பழத்தினை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Similar News

News February 8, 2026

தேனி: தவெக லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு

image

தேனி நகர் பகுதியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிலர் இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டனர். இதனால் தவெக மற்றும் நாதக இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தேனி நகர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

தேனி: இரு தரப்பினா் இடையே மோதல்; 4 பேர் மீது வழக்கு

image

தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கௌதமன் (40). உறவினா் இறப்புக்கு சுடுகாடு சென்றுவிட்டு வரும்போது இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சேகா், குபேந்திரன், குமரேசன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டதில் கெளதமன், குபேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

News February 8, 2026

தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!