News May 23, 2024

ஜெயம் ரவிக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன்?

image

மோகன் ராஜா இயக்கவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், ஜெயம் ரவிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தது, நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல, இப்படத்தில் அபிஷேக் பச்சனின் கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 1, 2025

BJP தலைவர்களிடம் ஆதரவு கோருவேன்: சுதர்சன் ரெட்டி

image

தனது வேட்புமனுவை தகுதியின் அடிப்படையில் அனைத்து லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் பரிசீலிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளரான அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், BJP உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால், அவர்களிடம் ஆதரவு கோர தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அரசியல் மாண்பு என்றாலும், சுதர்சனின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.

News September 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 445 ▶குறள்: சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். ▶ பொருள்: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.

News September 1, 2025

இந்திய பேட்டிங்கின் அச்சாரம் புஜாரா: மோடி புகழாரம்

image

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்தார். இந்நிலையில், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாரமாக புஜாரா திகழ்ந்ததாக PM மோடி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ஆஸி., மண்ணில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ததை யாரும் மறந்திட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பாராட்டு கடிதத்தால் தான் பெருமைப்படுவதாக புஜாரா கூறியுள்ளார்.

error: Content is protected !!