News May 23, 2024
ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில் கடம்பத்தூர் செஞ்சி பானம்பாக்கம் இடையே நேற்றிரவு மின்சார ரயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் திருவள்ளூர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லி பாபு (44) என்பது தெரியவந்தது.
Similar News
News September 8, 2025
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் பொறுப்பு, தனித்துறை ஆட்சியர் கீதா லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
ராணிப்பேட்டை: காதலர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை, நவ்லாக் பாலாற்றங்கரையில் உள்ள அரசு பண்ணையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை போலீசார் 2 பேரை கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் 3 பேர் கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News September 8, 2025
ராணிப்பேட்டை: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <