News May 23, 2024
திருத்தணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி உடன் வந்திருந்தார். அதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கூடியது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐஸ்வர்யா பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார்.
Similar News
News November 22, 2025
திருவள்ளூர்: காதலித்து ஏமாற்றியதால் கொலை!

தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவரை ரஞ்சித் காதலித்து ஏமாற்றியதால் அந்த பெண் 4 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் தாய் மாமன் ரஞ்சித்தின் மேல் கொலை வெறியில் இருந்த நிலையில் தனது 4 நண்பர்களோடு நவ-19 ரஞ்சித்தை வெட்டி கொலை செய்துள்ளனர். அதன்பின் போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ், ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கால்நடை லைசென்ஸ் அவசியம்: ஆவடி மாநகராட்சி அறிவிப்பு

ஆவடி மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதையடுத்து, மாடு வளர்ப்போர் மாநகராட்சி அலுவலகத்தில் கால்நடைகளுக்கு லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுகளை சொந்த இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும், இதை மீறி சாலைகளில் காணப்படும் மாடுகள் மாநகராட்சியால் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.