News May 23, 2024
நெல்லை: கணக்கெடுப்பால் கோவிலுக்கு தடை

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பக வனச்சரக பகுதிகளில் 34 குழுக்களைச் சேர்ந்த 250 வனப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். கனமழை மற்றும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் திருக்குருங்குடி நம்பி கோவில் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
தேரோட்டம் செல்லும் பக்தர்களுக்கு உதவி எண்கள்

நெல்லையப்பர் கோயில் ஆனி பெரும் தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை 8ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News July 5, 2025
நெல்லை இஸ்ரோ மையத்தில் ககன்யான் சோதனை வெற்றி

நெல்லை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஸ்எம்எஸ்டிஎம் மாடல் இன்ஜின் 4-ம் கட்ட பரிசோதனை 130 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ நேற்று (ஜூலை 4, 2025) தெரிவித்தது. முதல் கட்டமாக 30 வினாடிகள், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகள் சோதனை நடந்த நிலையில், இந்த வெற்றியால் இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.