News May 23, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

image

புதுவை காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தின் 9ம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை நடக்கிறது. காலை 9 மணிக்கு தேர் புறப்படுகிறது. மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது. பின், சுவாமிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு, 108 கலச திருமஞ்சனமும், நாளை மறுநாள் மாலை தெப்போற்சவமும் , வரும் 28ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

Similar News

News April 21, 2025

புதுச்சேரி: 10th போதும், ரூ.18,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>cpcb.nic.in/jobs.php<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It

News April 21, 2025

புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <>வலைத்தளத்தில்<<>> இந்த பணிக்கு விண்ணப்பிக்களாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!