News May 23, 2024

விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை

image

விருத்தாசலம் பாலக்கரை, ஆலடி, மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(மே 22) காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 6, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

கடலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

கடலூர்: 5,538 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 3099 மூத்தகுடிமக்கள், 2439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 538 பேர் தபால் வாக்கு அளிக்க படிவம் வழங்கி உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 6, 2026

கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!