News May 23, 2024
ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு ₹59,655 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்திருப்பது மத்திய அரசின் தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. ஆயத்த ஆடை, கைத்தறி, பருத்தி & செயற்கை நூலிழை, துணி ரகங்களை உள்ளடக்கிய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. குஜராத் ₹44,106 கோடி, மஹாராஷ்டிரா ₹33,122 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
Similar News
News August 18, 2025
மிஸ்ஸான ஹாலிவுட் வாய்ப்பு: ஃபஹத் சொன்ன காரணம்

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநர் Alejandro González Iñárritu-வின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஃபஹத் பாசில் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தான் வீடியோ காலில் ஆடிஷன் செய்தபோதே அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்கு தனது ஆங்கில உச்சரிப்பே காரணம் என்ற அவர், சம்பளமே இல்லாமல் 4 மாதங்கள் USA-ல் இருக்கச் சொன்னதால், அப்படத்தை கைவிட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
அதிமுக கூட்டணியில் தமமுக இணைந்தது.. ஜான்பாண்டியன்

பாஜக – அதிமுக (NDA) கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என முன்னர் கூறிவந்தார். சமீபத்தில் நெல்லைக்கு சென்ற EPS உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், NDA கூட்டணியில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
News August 18, 2025
நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்; பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்., கூட்டணி பலவீனமாக உள்ளதால், அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகம் நடத்தப்படுவதாகவும் சாடினார்.