News May 23, 2024
ஆமைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

➤டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தான் அலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமை. ➤ப்ளூரோடைர்ஸ், கிரிப்டோடைர்கள் என இதனை இருவகையாக பகுக்கலாம். ➤தற்போது 356 ஆமை இனங்கள் உள்ளன. ➤ஆமைகள் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வாழும், 80 செ.மீ வரை வளரும்.➤113 கிலோ எடை வரை இருக்கும். ➤ஆமைகள் ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை இடும். ➤ கடல் பயண திசைகாட்டியாக ஆமைகளைப் பண்டையத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
Similar News
News March 20, 2026
பசுவின் பித்தப்பை கல்லுக்கு ₹5 லட்சமா?

தலைப்பு ஆச்சரியப்படுத்துகிறதா? சீன பாரம்பரிய மருத்துவத்தில் பித்தப்பை கற்களிலிருந்து, ‘அங்கோங் நியு ஹுவாங் வான்’ என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. பெரிய பசுக்களில் மட்டுமே அரிதாக இந்த கற்கள் கிடைப்பதால், கடந்த 2025-ம் ஆண்டு 28 கிராம் பசுவின் பித்தப்பைக் கற்கள் ₹5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதாம்.
News March 20, 2026
FLASH: மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியல்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் விரும்பும் 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் மதிமுக வழங்கியுள்ளது. அதில், 1.மதுரை தெற்கு, 2.திருச்சி கிழக்கு, 3.வேளச்சேரி, 4.மணப்பாறை, 5.சாத்தூர், 6.கோவில்பட்டி, 7.கிணத்துக்கடவு, 8.நெல்லை, 9.பாளையங்கோட்டை, 10.கடலூர் (அ) புவனகிரி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், எதெல்லாம் கிடைக்க வாய்ப்புள்ளது?
News March 20, 2026
அடி வாங்குனவன் சொல்லணும்ல: அமீர்

ஜன நாயகன் படத்தில் என்ன பிரச்சனை என்று இருதரப்பும் சொல்லவே இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். ஜன நாயகனின் சென்சார் தாமதத்திற்கு அதில் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அடிச்சவன் சொல்லமாட்டான்… அடி வாங்குனவன் சொல்லணும்ல என்றவர், தன்னை இதற்காகத் தான் அடிக்கிறார்கள் என ஜன நாயகன் படக்குழு சொல்ல மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


