News May 22, 2024
RR அணி அபார வெற்றி

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய RR அணி 174 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதையடுத்து மே 24ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியை RR அணி எதிர்கொள்ள உள்ளது.
Similar News
News August 31, 2025
தேர்தல் பரப்புரைக்கு ரெடியான விஜய்..!

2 மாநாடுகளை நடத்தியுள்ள தவெக தலைவர் விஜய், அடுத்தகட்டமாக தேர்தல் பரப்புரைக்கு தயாராகி வருகிறார். செப்டம்பரில் திருச்சியில் இருந்து அவர் பரப்புரையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பரப்புரைக்காக பிரத்யேக வாகனம் தயாராகி வருகிறதாம். முதற்கட்டமாக 100 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அவர் பயணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான சுற்றுப்பயண திட்டத்தை தவெக அரசியல் குழு தயார் செய்துள்ளதாம்.
News August 31, 2025
வெற்றி படத்தின் 2-ம் பாகம்… ஹிப்ஹாப் அதி அதிரடி

ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மக்களின் மனதை வென்றவர் ஹிப்ஹாப் ஆதி. பின்னர் ஹீரோவாக களம் கண்டு, பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் வெளியான எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தனது வெற்றிப்படமான மீசைய முறுக்கின் 2-வது பாகத்தை எடுக்க ஆதி தயாராக உள்ளாராம். உங்களுக்கு ‘மீசைய முறுக்கு’ படம் பிடிக்குமா?
News August 31, 2025
வளர்ச்சியை பார்த்து EPSக்கு வயிற்றெரிச்சல்: TRP ராஜா

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து <<17564189>>EPS அறிக்கை<<>> வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் நிரூபித்து வருவதால், வயிற்றெரிச்சல் கொண்டு EPS பேசி வருவதாக அமைச்சர் TRB ராஜா சாடியுள்ளார். அறிக்கையில் EPS அரைத்த மாவையே அரைத்து, புளிப்பு காமெடி செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.