News May 22, 2024

அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா?

image

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இந்த ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News August 31, 2025

வெற்றி படத்தின் 2-ம் பாகம்… ஹிப்ஹாப் அதி அதிரடி

image

ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மக்களின் மனதை வென்றவர் ஹிப்ஹாப் ஆதி. பின்னர் ஹீரோவாக களம் கண்டு, பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் வெளியான எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தனது வெற்றிப்படமான மீசைய முறுக்கின் 2-வது பாகத்தை எடுக்க ஆதி தயாராக உள்ளாராம். உங்களுக்கு ‘மீசைய முறுக்கு’ படம் பிடிக்குமா?

News August 31, 2025

வளர்ச்சியை பார்த்து EPSக்கு வயிற்றெரிச்சல்: TRP ராஜா

image

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து <<17564189>>EPS அறிக்கை<<>> வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் நிரூபித்து வருவதால், வயிற்றெரிச்சல் கொண்டு EPS பேசி வருவதாக அமைச்சர் TRB ராஜா சாடியுள்ளார். அறிக்கையில் EPS அரைத்த மாவையே அரைத்து, புளிப்பு காமெடி செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 31, 2025

வெண்கலப் பதக்கம் வென்ற சாத்விக் சிராக் ஜோடி

image

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ – சென் போயாங் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை சீனா வெல்ல, 2-வது செட்டை இந்திய ஜோடி கைப்பற்றியது. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் 21 – 12 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

error: Content is protected !!