News May 22, 2024
சென்னை புறநகர் பகுதியில் மின்சார ரயில் சேவை பாதிப்பு

ஆவடி அருகில் இந்து கல்லூரி- பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 8 மணி அளவில் தண்டவாளத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை- அரக்கோணம் இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 45 நிமிடங்கள் போராடி கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை தொடங்கியது.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த <
News July 7, 2025
திருவள்ளூரில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 32 அடியாக உள்ள ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி 73% நிரம்பியுள்ளது. விரைவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து மே 21 முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.