News May 22, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி கையேடு

47-வது ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி இன்று (மே 22) தொடங்க உள்ளதையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி கையேடு QR கோடு முறையில் அச்சடிக்கப்பட்டு ஏற்காடு அடிவாரம் சோதனை சாவடியைக் கடக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News April 21, 2025
எர்ணாகுளம்-பாட்னா இடையே சிறப்பு ரயில்

எர்ணாகுளம்-பாட்னா சிறப்பு ரயில் (06085) வரும் ஏப்ரல் 25, மே 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு அடுத்தநாள் அதிகாலை 3.25க்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.15க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.05க்கும் வந்து சேலத்திற்கு காலை 6.12மணிக்கு வந்தடைகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
MSME- சேலம் மாவட்டத்திற்கு மூன்றாமிடம்!

தமிழகத்தில் ‘உத்யம்’ இணையதளத்தில் பதிவுச் செய்துள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் சென்னை, 3.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை 2.58 லட்சத்துடனும், சேலம் 1.77 லட்சத்துடனும் மூன்றாமிடத்தில் உள்ளது. பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.