News May 22, 2024
திருவாடானை அருகே வீடு இடிந்து சேதம்

திருவாடானை தாலுகா டி. நாகனி ஊராட்சி ஆதியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பெரியக்காள். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (செப்.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 12, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
News September 12, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.