News May 22, 2024
எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க எத்தனை எம்பிக்கள் தேவை?

எதிர்க்கட்சி என்ற தகுதியை பெற மக்களவையில் 10% உறுப்பினர்களை ஒருகட்சி பெற வேண்டும். அந்த வகையில் 543 எம்பிக்களில் குறைந்தபட்சம் 55 எம்பிக்கள் இருக்கும் கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 10 வருடங்களாக அந்த வாய்ப்பு காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 2014இல் 44 எம்பிக்களும், 2019இல் 52 எம்பிக்கள் மட்டுமே வென்றதால், காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
Similar News
News August 30, 2025
முதல்வர் இருக்கையில் EPS அமர்வார்: அண்ணாமலை

முதல்வர் இருக்கையில் EPS அமர்வார் என பாஜகவின் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என அனைத்து மக்களும் பேசத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்ட அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புரட்சி ஏற்பட்டு ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாக அரசு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். CM வேட்பாளராக EPS-ஐ அமித்ஷா குறிப்பிடாமல் இருப்பது சர்ச்சையானது கவனிக்கத்தக்கது.
News August 30, 2025
TechTalk: ஒரே WhatsApp-ல் 2 கணக்குகள் வைப்பது எப்படி?

Official WhatsApp, Personal WhatsApp என தனித்தனியாக WhatsApp பயன்படுத்துகிறீர்களா? இதற்காக Dual WhatsApp போன்ற பாதுகாப்பு இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டாம். ஒரே WhatsApp-ல் 2 கணக்குகளை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இதற்கு, முதலில் WhatApp settings-க்கு செல்லுங்கள். உங்கள் Profile Photo-வுக்கு அருகில் காட்டும் ’+’ குறியீட்டை க்ளிக் செய்து ‘Add Account’ கொடுத்தால் போதும். SHARE IT.
News August 30, 2025
டிரம்ப்பால் டாய்லெட்டுக்கு போன USA பிம்பம்: சுல்லிவன்

அமெரிக்காவின் பிம்பம் டாய்லெட்டில் கிடப்பதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் விமர்சித்துள்ளார். அதிக வரிவிதிப்பின் காரணமாக, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக திரும்புவதாகவும், இப்போது பலநாடுகள் USA-ஐ நம்பகமான கூட்டாளியாக கருதாமல், உறவை சீர்குலைக்கும் நாடாக பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.