News May 22, 2024
19 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

திருவாடானை தாலுகாவில் தினையத்தூர், எம்.ஆர். பட்டினம் உள்பட 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொண்டி, திருவாடானை
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்புதாளை, திணைக்காத்தான் வயல் அரசு உயர்நிலைப் பள்ளி என 19 அரசு பள்ளிகளுக்கு ரூ 2.98 லட்சம் மதிப்பில் 26 ஸ்மார்ட் போர்டுகளை ஓ.என்.சி.சி நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் வழங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
ராமநாதபுரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

கடலாடி அருகே சேனாங்குறிச்சி கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் சேனாங்குறிச்சி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரம் நடந்து வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் சேனாங்குறிச்சி கிராமத்திற்கு புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது
News November 24, 2025
ராமநாதபுரத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


