News May 22, 2024
அதிமுகவில் ஓரங்கட்டப்படும் ஜெயக்குமார்?

தேர்தல் பிரசார நேரத்திலும், அதற்கு முன்பும் பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்டோரை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து வந்தார். மோடி அரசு மீண்டும் அமைந்தால், ஜெயக்குமார் விமர்சனத்தை வைத்து தங்களுக்கு குடைச்சல் கொடுக்கக்கூடும் என அதிமுக தலைமை சந்தேகிக்கிறது. எனவே ஜெயக்குமாரை ஓரங்கட்டிவிட்டு, ஆர்பி உதயகுமாரை வைத்து கட்சியின் கருத்தை வெளியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 30, 2025
டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: UK மீடியா விமர்சனம்

சீனாவைக் காட்டிலும் இந்தியா மீது அதிக வரிவிதித்து டிரம்ப் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக UK ஊடகமான The Economist விமர்சித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவதன் மூலம், 25 ஆண்டுகால ராஜதந்திர உறவை டிரம்ப் பாழாக்கி விட்டதாகவும், வளர்ந்து வரும் வல்லரசு நாடான இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. மேலும், BRICS மற்றும் PM மோடியின் சீன பயணத்தையும் வரவேற்றுள்ளது.
News August 30, 2025
மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு எல்ஐசி முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய <<17560165>>இங்க க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.
News August 30, 2025
குடும்ப முதலீடு செய்ய CM வெளிநாட்டு பயணமா? EPS

CM-ன் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப முதலீட்டை மேம்படுத்தவா என EPS விமர்சித்துள்ளார். இதுவரை ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும், இதுவரை 4 முறை வெளிநாடு சென்றுள்ள CM, சொல்லும்படியான முதலீட்டை ஈர்த்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்து விட்டதாகவும் சாடியுள்ளார்.