News May 22, 2024

தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளி விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலையை மிஞ்சும் அளவிற்கு வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒருகிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையான நிலையில், இன்று ₹1.30 உயர்ந்து கிராம் ₹100.30க்கும், கிலோவிற்கு ₹1300 உயர்ந்து ₹1,00,300க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹10 ஆயிரம் கடந்திருப்பது 2ஆவது முறையாகும். இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ₹6,860, சவரன் ₹54,880க்கு விற்பனையாகிறது.

Similar News

News November 21, 2025

ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

image

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.

News November 21, 2025

குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

image

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

News November 21, 2025

BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

image

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!