News May 22, 2024

அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

image

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும்
வெள்ளம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகள் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். 1077 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு வெள்ளம் சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என  கலெக்டர் நேற்று கூறினார்

Similar News

News August 21, 2025

கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

கோவையில் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

image

கோவை மாவட்டத்தில் இணையதள மோசடி மூலம் நாள்தோறும் பலா் பல லட்சம் ரூபாயை இழந்து வருகின்றனா். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, இணையதள வா்த்தகம், ஆன்லைன் டாஸ்க் என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. அதன்படி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி நடந்ததாக புகாரின் பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 21, 2025

கோவையில் மீண்டும் தலைதுாக்கும் போஸ்டர் கலாசாரம்

image

கோவையில் அரசு, தனியார் சுவர்கள், மேம்பாலத் தூண்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல், வணிக, தனிநபர் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. இது வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, நகரின் அழகை கெடுக்கிறது. முன்பு ஓவியங்கள் வரைவதால் தடுக்கப்பட்ட போஸ்டர் ஒட்டும் பழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. பொதுசொத்தையும், நகரின் அழகையும் கெடுக்கும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

error: Content is protected !!