News May 22, 2024
Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்

வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை மின் வாரியத்திற்கு வழங்கலாம். அதேபோல, இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாதபோது மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இதனை கணக்கிட Bi-Directional மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை ₹2,764ஆக நிர்ணயித்துள்ளது மின் வாரியம். மும்முனை இணைப்புக்கு ₹5,011 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!

வாங்க உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம். மேலே உள்ள படத்தில் கடைசியாக இருக்கும் 5+1= ? எவ்வளவு சொல்லுங்க. பார்க்கும் போது கொஞ்சம் கடினமானதாக இருந்தாலும், கொஞ்சம் பொறுமையாக, உன்னிப்பாக கவனித்து பாருங்கள். உங்களுக்கு ஈசியாக பதில் கிடைக்கும். எத்தனை பேர் சரியான பதிலை கமெண்ட் பண்றீங்க என பார்ப்போம்? நேற்றைய கேள்விக்கான பதில் 18. கேள்விக்கு இங்கே கிளிக் செய்யவும்.
News August 17, 2025
13.72 லட்சம் மனுக்கள்.. வேகமெடுக்கும் பரிசீலனை!

ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனை முடிந்தபின் இம்மாத இறுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 17, 2025
12,778 அடி உயரத்தில் இருக்கும் கோயில்.. Goosebumps போட்டோஸ்!

இந்த கோயிலின் போட்டோஸை பார்க்கும் போது, நிச்சயமாக உங்களுக்கு ‘Goosebumps’ வரும். இதுதான் உலகில் அதிக உயரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலாகும். கடல் மட்டத்தில் இருந்து 12,778 அடி உயரத்தில், இமாச்சல பிரதேசத்தில் யூல்லா காண்டா என்ற இடத்தில் பனி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் போட்டோக்களை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா X-ல் பதிவிட்டுள்ளார். எப்படி இருக்கு..?